நான் வேண்டினேன்... இறைவன் எனக்குக் காட்சி அளித்தார்... கோமாளியாக

ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். நள்ளிரவு வேளை அது. கனவு ஒன்றைக் கண்டேன். தொடக்கம் இனிதாக இருந்ததால் மகிழ்ந்தேன். ஆனால், இறுதியில் மூச்சு நின்றது போன்று துடிதுடித்து விட்டேன். கண்களை மூடியபடியே அழுதுகொண்டிருந்தேன். தாரைதாரையாக கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. எனது கனவில் கண்ட காட்சிகள் பின்வருமாறு: “எனது நண்பர்கள் யாவரும் என்னை வெறுத்து ஒதுக்கி விட்டு துன்புறுத்தினர். என் பொம்மைகளைப் பிடுங்கினர். எனது புத்தகங்களை கிழித்தனர்." நீங்கள் எண்ணுவது சரிதான், நான் எனது பள்ளிக்கூடப் பருவத்தில் இருந்தேன். சரி, கனவைத் தொடர்வோம். "நான் அழுதுகொண்டிருந்தேன், எனது வகுப்பறையில். ஆறுதல் சொல்ல யாருமின்றி தனியாக அலறினேன்; கூச்சலிட்டேன். வீட்டிற்கு வந்து அழுதுகொண்டே படுத்துவிட்டேன். பள்ளியை விட்டு வரும் வழியில் அப்பா வாங்கிக் கொடுத்த பஞ்சு மிட்டாயும் இனிப்பாக தெரியவில்லை. திடுக்கென கனவிலிருந்து எழுந்தேன். கண்ட காட்சிகளின் கொடூரத்தை, மனதின் பயத்தை நீக்கும்படி நல்ல கனவு ஒன்று வேண்டும் என்று இறைவனை வேண்டினேன். அழுதவாறே மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தேன்.இம்முறை வந்த கனவானது முன்னர் கண்ட கனவின் த...