நான் வேண்டினேன்... இறைவன் எனக்குக் காட்சி அளித்தார்... கோமாளியாக

ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். நள்ளிரவு வேளை அது. கனவு ஒன்றைக் கண்டேன். தொடக்கம் இனிதாக இருந்ததால் மகிழ்ந்தேன். ஆனால், இறுதியில் மூச்சு நின்றது போன்று துடிதுடித்து விட்டேன். கண்களை மூடியபடியே அழுதுகொண்டிருந்தேன். தாரைதாரையாக கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

எனது கனவில் கண்ட காட்சிகள் பின்வருமாறு:

“எனது நண்பர்கள் யாவரும் என்னை வெறுத்து ஒதுக்கி விட்டு துன்புறுத்தினர். என் பொம்மைகளைப் பிடுங்கினர். எனது புத்தகங்களை கிழித்தனர்."

நீங்கள் எண்ணுவது சரிதான், நான் எனது பள்ளிக்கூடப் பருவத்தில் இருந்தேன்.

சரி, கனவைத் தொடர்வோம். 

 "நான் அழுதுகொண்டிருந்தேன், எனது வகுப்பறையில். ஆறுதல் சொல்ல யாருமின்றி தனியாக அலறினேன்; கூச்சலிட்டேன். வீட்டிற்கு வந்து அழுதுகொண்டே படுத்துவிட்டேன். பள்ளியை விட்டு வரும் வழியில் அப்பா வாங்கிக் கொடுத்த பஞ்சு மிட்டாயும் இனிப்பாக தெரியவில்லை.

திடுக்கென கனவிலிருந்து எழுந்தேன். கண்ட காட்சிகளின் கொடூரத்தை, மனதின் பயத்தை நீக்கும்படி நல்ல கனவு ஒன்று வேண்டும் என்று இறைவனை வேண்டினேன். அழுதவாறே மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தேன்.இம்முறை வந்த கனவானது முன்னர் கண்ட கனவின் தொடர்ச்சியாக அமைந்தது.

"படுத்திருந்த என்னை அன்போடு ஒருவர் அணைத்துக் கொண்டார். கண்களைத் திறந்து பார்த்த எனக்கு ஆச்சரியம். ஒரு கோமாளி போன்று விசித்திரமாக வேடமணிந்த ஒருவர் என் கண்முன்னே புதிய புத்தகங்களுடனும் பொம்மைகளுடனும் நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த உடன் என் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. என்னை கட்டி அணைத்து முத்தமழை பொழிந்து உற்சாகமூட்டினார். அவர் வேடத்தை சிறிது நேரம் கடந்தவுடன் கலைத்தபோது தான் அது யாரென்பதை அறிந்தேன்... எனது அப்பா..."

இக்கனவு எனக்கு அளித்த அமைதியோடு, இறையன்பை உணர்ந்தவளாய் மகிழ்வுடன் உறங்கினேன். மீண்டும் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றேன். 


This is a short story written by me very recently for a competition and I won the first place.


Comments

Popular posts from this blog

Idk and Idc

True friends!?

Extrovert ?